Thursday 30 July 2015

மருத்துவ சமையல் - பகுதி 1

மருத்துவ சமையல்

ஜெய்மாம் லக்ஷ்மி வாசகர்களே உங்களுக்காக ஓம் பாஸிட்டிவ் யோகா செண்டர் நடத்துனரும் எண்கணிதம்,வாஸ்து,பரிகார நிபுணருமான திரு ஆர்.பி ஓம் அவர்கள் இனி தொடர்ந்து மருத்துவ சமையல் எழுத இருக்கிறார் படித்து பயன் பெறுங்கள்.எந்த வியாதியாக இருந்தாலும் பிரச்சனையாக இருந்தாலும் அவரை சந்தித்து தீர்வு பெறுங்கள்.

தொடர்புக்கு  :8056156496,9962442417
எச்சரிக்கை : 
அனுமதியின்றி யாரும் நகல் எடுக்க கூடாது

    அன்பான காலை வணக்கம் நண்பர்களே 
    ஏசு அல்லா ஹரஹர ஓம்
    ராதே கிருஷ்ண கணேசா ஜெய ஜெய ஓம்
    அன்பெனும் ஆலமரமாய் நாம் பரந்து விரிந்து அதன் ஈர நிழலில் அனைவரையும் இளைப்பாற செய்வோம்

     அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம் 
    - அன்புடன் ஆர்.பி.ஓம்

மருத்துவ சமையல் - 1

வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும் கோவைக்காய் சாதம்
பலன்கள்:
1.கோவைக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி 
ஆகியவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்தாகும். 
2.பித்தம், ஷயம், மூல நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படும். 
3.கரம் மசாலா அல்லது உஷ்ணத்தைத் தரும் மருந்துகளால் ஏற்படும் 
தீமைகளுக்கு கோவைக்காய் நல்ல மாற்றாகும்.

தேவையான பொருட்கள்: 
கோவைக்காய் - 1/4 கிலோ 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - தேவையான அளவு 
சீரகப் பொடி - 1 டீஸ்பூன் 
மல்லித் தூள் - 1 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
செய்முறை: 
முதலில் கோவைக்காயை நீரில் கழுவி, நீளமாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு பௌலில் போட்டு, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லித் தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து பிரட்டி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பிரட்டி வைத்துள்ள கோவைக்காயை சேர்த்து மிதமான தீயில் நன்கு வேகும் வரை வதக்கி இறக்க வேண்டும். 
குறிப்பு :
நாங்கள் தருகிற குறிப்புகள் ஒரு சிறு உதவியே 100 % தீர்வு வேண்டுமெனில் எங்களை தொடர்புகொள்ளுங்கள்
 முழுமையாக தீர்வுக்கு உங்கள் நேரம்,பெயரமைப்பு உடலின் பஞ்ச பூத தன்மை,உங்கள் பழக்க வழக்கம்,மன நிலை உங்கள் கர்மா,வீட்டின் வாஸ்து அமைப்பு என பல அமசங்களை சீர்தூக்கி பார்த்து தீர்வு,பரிகாரம்,வைத்தியம்ஆலொசனை, வழங்கவேண்டும்.
நிச்சயம் முழுமையான வெற்றி கிடைக்கும்.